முப்பது ஆண்டுகளாய் கல்விப் பணியில், மக்களுக்காகத் துடிக்கும் ஒரே இதயம்
சிந்தனையைச் செதுக்குவோம், சமூதாயத்திற்காக சேவையாற்றுவோம்
தேய் யோக் ஜியுன்
நான் ஆசிரியை தேய் யோக் ஜியுன். லாபிஸ் மண்ணில் பிறந்து வளர்ந்து, என் வாழ்நாள் முழுவதையும் இங்குள்ள பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தவள். வகுப்பறையில் மாணவர்களுக்குத் துணையாகவும் வகுப்பறைக்கு வெளியே ஊர் மக்களின் அன்றாட பிரச்சனைகளில் அவர்களுக்குத் துணையாகவும் நின்றவள். வெள்ளப் பேரிடர் வந்தபோது துயர் துடைப்புப் பொருட்களைப் பெட்டி பெட்டியாக என் கைகளில் சுமந்து மக்களுக்கு வழங்கினேன். அடைபட்ட சாக்கடை முதல் பழுதடைந்த தெருவிளக்கு வரை மக்கள் சந்திக்கும் அனைத்து குறைகளையும் முன்னின்று சரிசெய்தேன். ஓர் ஆசிரியையின் பணி என்பது வகுப்பறையோடு முடிந்துவிடுவதில்லை. இம்முறை, அதே அர்ப்பணிப்போடு மாநிலச் சட்டமன்றத்தில் நம் பெக்கோக் மக்களின் முன்னேற்றத்திற்காக இன்னும் பல தூரம் உங்களுடன் ஒன்றாய் பயணித்து உழைக்க விரும்புகிறேன்.


நீங்கள் உலகைத் தேடிச் சென்றீர்கள், நான் நம் மண்ணைக் காக்க இங்கேயே தங்கிவிட்டேன்
வணக்கம், நான் ஆசிரியை தேய் யோக் ஜியுன். 30 ஆண்டுகளாக இந்த மண்ணில் குழந்தைகளுடன் இணைந்து அவர்களின் முன்னேற்றத்திற்காக துணை நின்றேன். நன்றாகப் படிப்பவர்களைக் கண்டு அகம் மகிழ்ந்தேன். படிப்பில் பின்தங்கியவர்களைக் கைவிட என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களுடன் அமர்ந்து ஒவ்வொரு கணக்கையும் பொறுமையாக கற்பித்து அவர்களையும் படிப்படியாக முன்னேற்ற தோள் கொடுத்தேன். பின்னர், அவர்கள் இந்த உலகில் தங்களுக்கென ஒரு தடம் பதித்து வெற்றிப் பாதையில் பயணிப்பதை கண்டு மனம் நெகிழ்ந்தேன். எந்தக் குழந்தையையும் கைவிடாமல் இருப்பதே ஓர் ஆசிரியையின் அடிப்படைக் கடமை என்று நான் எப்போதும் நம்புகிறேன். கல்வி என்பது பொறுமையான, அமைதியான பணி. இதற்கு உடனடிப் பாராட்டுகள் எதுவும் கிடைப்பதில்லை. ஆனாலும், என் வாழ்நாளில் நான் செய்த மிக முக்கியமான மற்றும் மனநிறைவைத் தந்த உன்னதமான பணி இதுவே ஆகும்!
உங்களில் பலர் வெகு காலத்துக்கு முன்பே ஊரைவிட்டுச் சென்றுவிட்டீர்கள் என்பதை நான் அறிவேன். சிங்கப்பூர், ஜொகூர் பாரு, கோலாலம்பூர் போன்ற தொலைவான இடங்களுக்கு வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளீர்கள். அது உங்கள் குடும்பத்திற்காகவும் அவர்களின் சிறந்த வாழ்விற்காகவும்தான் என்பது புரிகிறது. அதில் எந்தத் தவறும் இல்லை. நான் உங்களை எண்ணிப் பெருமைப்படுகிறேன். ஆனால், காலப்போக்கில் நம் ஊரில் மக்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். இளம் முகங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. நாம் ஒவ்வொருவரையும் வளர்த்த இந்த ஊர், ஒருநாள் மறக்கப்பட்டு, கைவிடப்பட்டுவிடுமோ என்ற எண்ணம் என்னுள் எழுகிறது.
வெளியூரில் இருக்கும் உங்கள் மனதை விட்டு அகலாதது, ஊரில் இருக்கும் பிள்ளைகளும் வயதான பெற்றோரும்தான். உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்: ஊரை என்னிடம் ஒப்படையுங்கள். இங்கே தங்கியிருக்கும் பிள்ளைகளுக்கு, இத்தனை ஆண்டுகளாகப் பணியாற்றியது போலவே, நானே உடனிருந்து அவர்களைப் படிக்க வைப்பேன். அவர்களை முன்னேற்ற உதவுவேன். வலுவான கல்வி அடித்தளத்தையும் பள்ளி நேரத்திற்குப் பிந்தைய செயல்பாடுகளையும் சமூகத்திற்குள் கொண்டுவந்து, எந்தக் குழந்தையையும் பின்தங்கிவிடாமல் பார்த்துக்கொள்வேன். இங்கே தங்கியிருக்கும் முதியோர்களுக்கு இலவச மருத்துவ முகாம்களையும் சுகாதார சேவைகளையும் அவர்கள் வீட்டு வாசல் வரை கொண்டு சென்று அவர்கள் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ வழி செய்வேன். நீங்கள் வெளியே நன்றாக உழையுங்கள். ஊரை நான் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறேன். அப்போதுதான், நீங்கள் உங்கள் பாதையில் நிம்மதியாக முன்னேற முடியும். எனவே, இம்முறை என்னையும் உங்களையும் காக்க ஒரு உதவி செய்யுங்கள்: ஜூலை 11 அன்று, நேரம் ஒதுக்கி ஊருக்குத் திரும்பி வந்து உங்கள் வாக்குகளைச் செலுத்துங்கள். பெரிய கோஷங்களை நான் முழங்க மாட்டேன், ஒன்றை மட்டுமே உறுதியாகப் பற்றிக்கொள்ள விரும்புகிறேன்: எப்போதும் இங்கேயே இருப்பேன், இந்த மண்ணுடன் சேர்ந்தே நடப்பேன்.
என்றும் உங்களுடன், எப்போதும் களத்தில்
இத்தனை ஆண்டுகாலமாய் நான் செய்த உதவிகள் மிகச் சிறியவைகள்தான். அவற்றை ஒரு பதிவாகக் குறித்து வைக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அவற்றில் எதுவும் இந்தத் தேர்தலுக்காகத் தொடங்கியதும் இல்லை. ஒரு மனிதராய் செய்ய வேண்டிய அடிப்படைத் தார்மீகக் கடமைகள் மட்டுமே அவைகள். நான் அந்த இடத்தில் இருந்தேன், அதைச் செய்ய மனப்பூர்வமாக முன்வந்தேன்; அவ்வளவுதான். அவற்றில், இப்போதும் என் நினைவில் இருக்கும் ஒரு சில சம்பவங்கள்
- 01லாபிஸ் கிராமத் தலைவர் (2018-2019) பொது மைதான கழிவறைகளைப் பழுதுபார்க்க உதவினேன், சாக்கடைகளைச் சுத்தம் செய்யக் கோத்தோங்-ரோயோங் ஏற்பாடு செய்தேன், வீடு பழுதுபார்க்கும் உதவிக்கு விண்ணப்பிக்கத் துணையாக நின்றேன்.
- 02சாஆ & லாபிஸ் பெருவெள்ளம் (2023) நேரடியாகக் களமிறங்கி, நிவாரணப் பொருட்கள், உணவுகள் மற்றும் குடிநீர் வழங்கினேன்; வீடுகளைச் சுத்தம் செய்யத் துணையாக நின்றேன்.
- 03உள்ளூர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினேன் ஜாலான் சுல்தான் போக்குவரத்து விளக்குகளைச் சீரமைப்பது, தாமான் மேவா சாக்கடைகளைத் தூய்மைப்படுத்துவது, ஜாலான் சுல்தான் பழுதடைந்த தெருவிளக்கை மாற்றுவது, சாஆ ஹாக்கர் மையம் மற்றும் தீயணைப்புத் தண்ணீர் குழாய்களைப் பராமரிப்பது என ஒவ்வொரு குறைபாட்டையும் லாபிஸ் நகராட்சியின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டேன்.
- 04எந்தவொரு குழந்தையையும் கைவிடாமல் அவர்களை முன்னேற்ற உதவினேன்படிப்பில் சிறந்தவர்கள் மற்றும் பின்தங்கியவர்கள் என இருதரப்பினருடனும் அமர்ந்து அவர்கள் படி படியாக முன்னேற உதவியதோடு, ஹான்லின் (Hanlin) டியூஷன் மாணவர்கள் பலர் எஸ்.பி.எம் தேர்வில் 10A பெற்று மெட்ரிகுலேஷன் கல்விக்குச் செல்லவும், தங்களின் உயர்கல்வி வாய்ப்புகளை நேரில் கண்டறிய எஸ்.பி.எம் முடித்த மாணவர்களை நேரடியாக மலேசிய தேசிய பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் செல்லவும் உறுதுணையாக நின்றேன்.
- 05இனங்களைக் கடந்த டிஜிட்டல் சேவைசாஆ பகுதியில் 88 முதியோர்களுக்கும் பெக்கோக் பகுதியில் 85 முதியோர்களுக்கும் MyDigital ID பதிவுகளை மேற்கொள்ள உதவும் வகையில் நடமாடும் சேவை மையங்களை நடத்தினேன்; அத்துடன் தபால் வாக்குகள் (Undi Pos) தொடர்பான விழிப்புணர்வை இரு மொழிகளிலும் மக்களிடம் கொண்டு சேர்த்தேன்.
- 06சமூக அக்கறைKPJ மருத்துவ நிபுணர்கள் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவக் குழுவினருடன் இணைந்து எலும்புப் பரிசோதனை, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை கண்டறியும் இலவச மருத்துவ முகாம்களை நம் மக்களுக்காக நேரடியாகக் கொண்டு வந்தேன்.
கல்வியாளராய் தொடங்கி இன்று மக்கள் சேவை பணியில்
அன்று வகுப்பறையில் போதித்த நீதியையும் கடமையையும் இன்று மக்கள் மத்தியில் நிலைநாட்டக் களமிறங்குகிறேன்.
ஆசிரியை தேய் யோக் ஜியுன்
பெக்கோக் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு எனது மூன்று வாக்குறுதிகள்
என் வாழ்நாள் முழுவதும் நான் வெற்று வார்த்தைகளைப் பேசியதில்லை, புகழையோ சுயநலத்தையோ நாடியதில்லை; ஒரு காரியம் சரியானது என்று எனக்குத் தோன்றிவிட்டால், அதை நான் முழுமையாகச் செய்து முடிப்பேன். கீழே உள்ள மூன்று விஷயங்களும் நான் ஏற்கனவே செய்துவருபவைதான். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இவற்றை இன்னும் சிறப்பாகச் செய்து முடிப்பேன். (முழுமையான கொள்கை அறிக்கை பின்னர் வெளியிடப்படும்.)
குடும்பச் சூழ்நிலையால் எந்தக் குழந்தையும் கைவிடப்படக் கூடாது
ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு குடும்பச் சூழ்நிலையில் பிறந்து தங்களின் பயணத்தைத் தொடகுகிறார்கள்; இவர்களின் கைகளைப் பற்றிக் கொண்டு வழிநடத்த ஒருவர் தேவை. இவர்களில் தேவையானவர்களுக்கு கல்வி உதவிகளைப் பெற்றுத்தர நான் முன்னின்று உழைப்பேன்; நம் இளைய தலைமுறையினர் தங்களின் உயர்கல்வியை நோக்கி முன்னேற உறுதுணையாக நிற்பேன். ஏனென்றால், தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே ஒரு குழந்தையின் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை; தன் மீது ஒருவராவது உண்மையான நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதை உணரும் குழந்தைகள்தான் இவ்வுலகில் சாதனையாளர்களாகின்றனர் என்பதை நான் ஆழமாக நம்புகிறேன்.
முதியோர் தம் சொந்த ஊரிலேயே அமைதியாக முதுமையை அனுபவிக்க
வீட்டில் ஒரு முதியவர் இருப்பது பெரும் பொக்கிஷம். முதியோர்களுக்கும் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கும் நானே நேரில் சென்று, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசாங்க உதவிகளை (STR / SARA / ஜொகூர் மாநில உதவிநிதி) போன்றவைகளை ஒவ்வொன்றாகப் பெற்றுத்தர முன்னின்று உழைப்பேன். மேம்பட்ட மருத்துவம், பொழுதுபோக்கு மற்றும் இலவச மருத்துவ முகாம்களை உங்களுக்கு நேரடியாகக் கொண்டு வருவேன். இதன் மூலம், தங்களின் வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்த நம் பெரியவர்கள் அவர்களின் முதுமைக் காலத்தைத் தனிமையின்றி, அன்பான துணையோடும் சுயமரியாதையோடும் நிம்மதியாகக் கழிக்க வழிவகை செய்வேன்.
உங்கள் வாசலில் இருக்கும் சிறு பிரச்சனையும், எனது மேசையின் மேல் இருக்கும் பெரும் கடமையாகும்.
பழுதடைந்த தெருவிளக்குகள், அடைபட்ட வடிகால், வீட்டிற்குள் புகும் வெள்ளம் என உங்கள் வீட்டைப் பாதிக்கும் எதுவுமே ஒருபோதும் சிறிய விஷயமல்ல. சாஆ, பெக்கோக் மற்றும் சுங்கை காராஸ் (Sungai Karas) பகுதி மக்கள் அனைவரின் கோரிக்கைகளையும் செவிமடுத்து, அதனைத் பின்தொடர்ந்து, முழுமையான தீர்வு காணும் வரை உங்களுடன் இறுதிவரை உறுதியாக நிற்பேன்.
ஆதரவுக் குழுவின் உறுப்பினராகுங்கள்
பெக்கோக் சட்டமன்ற தொகுதியின் வெற்றி சில நூறு வாக்குகளில் தீர்மானிக்கப்படலாம். எனவே, உங்களின் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. உங்கள் பெயரைப் பதிவுச் செய்துக் கொள்ளுங்கள். முதன்மையான சமீபச் செய்திகளை உங்களுக்கு உடனுக்குடன் வழங்குவோம். வாக்களிப்பு நாளில் போக்குவரத்து வசதிகள் இல்லாவிடில் அல்லது நடமாட சிரமமாக இருப்பின், உங்களை அழைத்துச் செல்ல வாகனங்களை ஏற்பாடு செய்து தரப்படும். உங்களின் ஒவ்வொரு வாக்குகளும் இங்கு விலைமதிப்பற்றது.




